02 செப்டம்பர் 2015

ஆ - சுஜாதா

வெகு நாட்கள் கழித்து மீண்டும் புத்தகங்களை கையில் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

வார்ம் அப்பிற்காக சுஜாதாவிலிருந்து.

ஆ - கணேஷ் - வசந்த் கதை. சும்மா வருகின்றார்கள்.

எதில் தொடர்கதையாக வந்தது என்று தெரியவில்லை. தலைப்பை வைத்துவிட்டு கதையை யோசித்தாரோ, இல்லை நினைத்த கதைக்கு கிடைத்த தலைப்பு என்று வைத்தாரோ. தலைப்பை ஆ என்று வைத்ததால் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் ஆ. எரிச்சலாகவும், குழந்தைத்தனமாகவும் இருக்கின்றது. எவர் தந்த யோசனையோ!!!!

நன்றாக தினமும் அலுவலகம் சென்று, ரிசெசன், அப்ரைசல், எச் ஆர் தொந்தரவு ஏதுமின்றி, ப்ரொகராம் (தமிழில் என்ன? ஆ, நிரலி, பல்லில் சிக்கிய பருப்பை தேடும் நினைப்பு வருகின்றது) மட்டும் எழுத வேண்டியிருந்த பொற் காலத்தில் இருக்கும் ஒருவனுக்கு ஏற்படும் பிரச்சினை.


மனித மூளை, உலகத்தி மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர். சிறு வயதில் எப்போதோ பார்த்த ஒருவரை மறுபடியும் பார்க்கும் போது அவரை கண நேரத்தில் கண்டுகொள்கின்றது, அவரது வழுக்கைத் தலையையும், கண்ணாடியையும் மீறி. அதே போல் எண்ணிலடங்கா விஷயங்களை தனக்குள் செர்த்து வைத்து கொண்டுள்ளது. தனக்கு ஒரு எல்லையை வகுத்து வைத்துக் கொண்டு அது தன் பலமறியா அனுமார் போல, நாளை என்ன சமையல் என்றோ, கபாலியில் தலைவர் எப்படி இருப்பார் என்றோ அது தேமே என்று யோசித்து கொண்டிருக்கின்றது.

மூளை கொஞ்சம் தன் எல்லையை மீறினால், விளைவு??

தினேஷின் மூளை தன் எல்லையை மீறுகின்றது, தலைக்கு குரல்களில் ஆரம்பித்து, மல்டிபிள் பெர்சானாலிட்டி டிஸ்ஸாடர் வரை. இதோடு மறுபிறவி.

முடிவு மர்மக்கதைகளுக்குரித்த விதிப்படி.

நல்ல விறுவிறுப்பான கதை. கதை தினேஷ் என்பவன் கூறுவதாக உள்ளது. அதுவே கதையின் அடித்தளம். அதுவே சில இடங்களில், சில விஷயங்களை தெளிவு படுத்தாமல் குதித்து விட்டு ஓடுகின்றது.

ஆ.ஆ தான், ஆவ்வ்வ் அல்ல


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக