18 டிசம்பர் 2012

விகட(ன்) துணுக்குகள்

ஆனந்த விகடனை இப்போது புதிதாக படிப்பவர்களுக்கு ஒரு சந்தேகம் வரக்கூடும். தலைப்பிற்கு உள்ளடக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று. பத்து வருடங்களுக்கு முன்பு வரை அதில் வரும் நகைச்சுவை துணுக்குகள் சிரிக்கும் படி இருந்தன. ஆனால் இன்று எரிச்சல்தான் வருகின்றது.

மதன், சிம்பு தேவன், சாரதி டேச்சு இவர்களின் ஜோக்குகள் பிரபலம். விகடன் பொக்கிஷத்தில் வந்த சில ஜோக்குகளின் சேகரிப்பு.

எப்போதாவது போரடித்தால் படிப்பது. எத்தனை முறை படித்தாலும் புதிதாகத்தான் தோன்றுகின்றது. ஒன்றிரண்டு பிளேடுகள் இருக்கலாம் ஆனால் கோபுலு, மதன் எதிலும் குறைவில்லை. அனைத்தும் பிரமாதம். நகைச்சுவையுடன் அந்த முக பாவனைகள், மதனை அடித்துக் கொள்ள முடியாது. விதவிதமான கேரக்டர்கள், "சிரிப்புத்திருடன் சிங்கார வேலு", "முன் ஜாக்கிரதை முத்தண்ணா", "புரோக்கர் புண்ணியகோடி", ""முழுச்சோம்பல் முருகேஷ்","ரெட்டைவால் ரெங்குடு".


நன்றி விகடன்.

1 கருத்து:

  1. ஆகா...படங்களை பார்த்ததும் பழைய விகடன் பத்திரிகையை பார்த்த பீலிங்!!!

    பதிலளிநீக்கு