காந்தியைப் பற்றி மக்களின் பார்வை பலவித காரணங்களைப் பொறுத்து மாறுகின்றது. சிலருக்கு மாபெரும் மனிதர், வழிகாட்டி, சிறந்த அரசியல்வாதி, நல்ல தலைவர், சுதந்திரம் பெற்றுத் தந்தவர், மக்களிடம் அஹிம்சையை பரப்பியவர், எளிமையானவர் என்று அவரைப் பற்றி போற்றுவோரும் உள்ளனர், அதே சமயம் அவர் இந்து மதவாதி, இந்துக்களுக்கு துரோகம் செய்தவர், இஸ்லாமியர்கள் மீது கரிசனம் காட்டியவர், தலித்துகளுக்கு எதிரானவர், தன் முடிவை மற்றவர்கள் மீது திணித்தவர், உண்ணாவிரதம் என்ற பெயரில் மற்றவர்களை மிரட்டியவர் என்று கூறுவோரும் உள்ளனர். பெரும்பாலான கருத்துக்கள் மற்றவர்களால் உருவாக்கப்பட்டு ஒருவர் மீது திணிக்கப்பட்டதாகத்தான் இருக்கும்.
இது போன்ற பல விமர்சனங்களே அவர் ஒரு பெரிய ஆள் என்பதற்கு போதுமான சாட்சி. காந்திமீது பலவித விமர்சனங்கள் இருந்தாலும் அவரை யாரும் ஒரு மோசமான மனிதர் என்று கூறியதில்லை. ஆனால் இன்றைய சிந்தந்தப்படி ஒருவரின் கருத்து பிடிக்காவிட்டால் அவரையே பிடிக்காமல் போகவேண்டுமே, அதனால் பல இளைஞர்களுக்கு அவர் மோசமானவர்.