14 பிப்ரவரி 2013

சின்ன எச்சரிக்கை

ஏதோ ஆர்வத்தில் நானும் ஒரு பிளாக் ஆரம்பித்து எனது குப்பையை இங்கு கொட்டிக் கொண்டிருக்கின்றேன். இந்த பிளாக் என் பெண்ணை விட 13நாட்கள் வயதில் மூத்தது. பெண் வளரும் போது, ப்ளாக் மட்டும் அப்படியே இருக்கின்றதே என்று ஒரே வருத்தமாக இருக்கின்றது. அதனால் இப்போதுதான் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கின்றேன். சின்ன சின்ன மாற்றங்கள், விபரீத தோற்றம் எல்லாம் நேரிடலாம். வருகின்ற இரண்டு மூன்று பேரும் பயந்து ஓடி விட வேண்டாம் என்பதற்கு தான் இந்த எச்சரிக்கை.

சும்மா ஒரு டெஸ்டிங்காக லைவ் ட்ராபிக் ஃபீடரை இணைத்து பார்த்தேன். வேலை செய்கின்றது (அதில் நான் மட்டும் தனியாக உள்ளது கொஞ்சம் பயமாக உள்ளது)

அடுத்தடுத்து ஏதாவது வரும். நீரை விட்டு பாலை உண்ணும் அன்னம் போல, பயத்தை விடுத்து பதிவை படிக்க.

1 கருத்து:

  1. >>சும்மா ஒரு டெஸ்டிங்காக லைவ் ட்ராபிக் ஃபீடரை இணைத்து பார்த்தேன். வேலை செய்கின்றது (அதில் நான் மட்டும் தனியாக உள்ளது கொஞ்சம் பயமாக உள்ளது)

    யாமிருக்க பயமேன்? :-)

    பதிலளிநீக்கு