உபசாரம்
சுகாவின் நான்காவது புத்தகம். வழக்கம்போல கட்டுரை தொகுப்பு. தாயார் சன்னதி, மூங்கில் மூச்சு, சாமானியனின் முகம் வரிசையில் அடுத்த புத்தகம்.
புத்தகத்தில் பல கட்டுரைகள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அனைத்தும் பிரமாதம் என்று கூற முடியவில்லை. மூன்று வருடங்களில் எழுதிய அனைத்தையும் கலந்து கட்டி வைத்துள்ளனர். பெரும்பாலும் மறைந்தவர்களை பற்றிய கட்டுரைகள். அவர்களை பற்றிய ஒரு நினைவை நம்முள் கிளப்பிவிடுகின்றது. ஜெயகாந்தன், பாலு மகேந்திரா, கல்பனா, கலாபவன் மணி, வெங்கட் சாமிநாதன், எம்.எஸ்.வி பற்றிய கட்டுரைகள் எல்லாம் அவர்கள் மறைவின் போதும் அதையொட்டியும் எழுதப்பட்டவை. அவர்களை பற்றிய பொதுவான கட்டுரைகளாக இல்லாமல், அவர்களுடனான தன் அனுபவங்களை கூறியிருப்பதுத்தான் அவற்றை சிறப்பாக்குகின்றது.