ஒரு எழுத்தாளர், ஒரு கான்செப்ட் வெற்றி பெற்று விட்டால் உடனே அதை பயன்படுத்திக் கொள்வதில் விகடன் எப்போதும் முந்திக்கொள்ளும். ஆனால் அது பெரும்பாலும் முதல் முயற்சி பெற்ற வெற்றியை அடையாது. ஒரு செயற்கைத்தனம் வந்துவிடும்.
சுகா எழுதிய தொடர் ஒரு உதாரணம். கோபல்ல கிராமம் நாவலுக்கு அடுத்து எழுதப்பட்டது இது. முதல் நாவலில் இருந்த அந்த உயிரோட்டம் இதில் இல்லை என்பது என் கருத்து.
முதல் நாவலை ஒப்பிடாமல் இதை பற்றி மட்டும் பேசுவது என்பது முடியாது.
முதல் பகுதி மட்டும் முந்தைய பகுதியின் தொடர்ச்சி போல இருக்கின்றது. இரண்டாம் பகுதி எங்கெங்கோ சுற்றி வருகின்றது. பம்பாயில் நடந்த மாலுமிகளின் கலவரம் எல்லாம் சுவாரஸ்யமாக இருந்தாலும் ஒட்ட மறுக்கின்றது.
முதல் பகுதியில் வரும் அந்தசில்லுவின் கதை சுவாரஸ்யம், உயிரோட்டமாக உள்ளது. அதில் வரும் காரியின் கதை போனஸ். வெட்டுக்கிளிகளின் அட்டகாசம்
காவல்க்கோட்டத்திலும் வரும் ஒரு சம்பவம், நான் ஏதோ ஒரு இடத்தில் நடந்திருக்கும் என்று நினைத்தல், அது ஒரு தமிழகத்திம் பல இடங்களை பாதித்திருக்கின்றது போல. முதல் பகுதி முழுவதும் கோபல்ல மக்களின் வாழ்க்கை, குடும்பம் என்று போகின்றது.
இரண்டாம் பகுதி அவர்களின் சமூக வாழ்வை பெசுகின்றது. வெள்ளையன் கொண்டுவந்த புதியவிஷயங்களின் மக்களின் தயக்கம், தயங்கியவர்களே பின்னர் அதில் மூழ்கிய விந்தை, ஜாதி, வர்க்கம் பற்றிய மக்களின் புரிதல்களின் மாற்றம்.
சுதந்திரப்போராட்டத்தின் ஆரம்ப வீரர்களை பற்றிய கதைக் குறிப்புகளும் கிடைக்கின்றன. காந்தியடிகளை பற்றிய விமர்சனம், பாமர மக்களிடையே இருந்த அவரது பிம்பம்.
ஆனால் தீடிரென வரும் பம்பாய் மாலுமிகளின் போராட்டம் துண்டாக தெரிகின்றது.
கோபல்ல கிராமத்தில் கிடைக்கும் ஒரு அனுபவம், கோபல்ல கிராமத்து மக்களிடம் கிடைக்கவில்லை என்பது உண்மை.