ஜடாயு பல ஆண்டுகளாக இணையத்தில் இயங்கி வருபவர். கம்பராமாயண ரசிகர். ஆர்.எஸ்.எஸ்க்காரர். (ஆமாம் முற்போக்குவாதிகள் / அறிவுஜீவிகள் எல்லாம் கிளம்பலாம்). ஆழ்ந்த தமிழ் புலமை கொண்டவர். அவர் எழுதிய முதல் நூல் காலந்தோறும் நரசிங்கம்
ஹிந்துத்துவம் என்பதே ஒரு கெட்டவார்த்தை என்பது போன்ற தோற்றத்தை உண்டாக்க நமது போலி முற்போக்காளர்கள் முயன்றுவருகின்றனர். அவர்களுக்கு உதவ சில குழுக்களும் திரிகின்றன. ஸ்ரீராம் சேனா, அந்த சேனா என்று பல உதிரிகள் செய்யும் அடாவடித்தனங்களையும் ஹிந்துத்துவம் என்ற ஒரே குடையில் கொண்டுவர முயற்சிக்கின்றனர். எது உண்மையான ஹிந்துத்துவம்? கொஞ்சம் சிக்கலான கேள்வி. அதற்கு பதில் தர பல புத்தகங்கள் உள்ளன. ஜடாயுவின் புத்தகம் அதில் ஒன்று.

ஹிந்துமதம் குறித்து பக்தி நோக்கில் எழுதப்படும் கட்டுரைகளுக்கோ, எழுதுபவர்களுக்கோ எவ்விதப்பிரச்சினையுமில்லை. ஹிந்துமதத்தை அரசியல், பண்பாட்டு, வரலாற்று ரீதியில் அணுகும் எழுத்தாளர்களுக்கு மட்டுமே பிரச்சினை. இந்த நிலையில் ஹிந்துமதத்தை பற்றி ஆராய்ச்சி பூர்வமாக கட்டுரை எழுதுபவர்கள் வெகு குறைவு. அவர்களில் ஒருவர் ஜடாயு.
தமிழ் ஹிந்து (ஒரிஜினல். தி ஹிண்டு இல்லை) தளத்தில் பல கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். காலைத்தேநீருடன் இந்துத்துவா என்று வரிசையாக பல கட்டுரைகளை எழுதினார். அக்கட்டுரைகளிலிருந்து சிலவும், வேறு தலைப்புகளில் அதே தளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு காலந்தோறும் நரசிங்கம். இதில் வரும் பல கட்டுரைகளைப் பற்றியும் அதோடு தொடர்புடைய என் கருத்துக்கள், நினைவுகள், அனுபவங்கள் கீழே.