என்னிடம் இருக்கும் புத்தகங்கள் அனைத்தும் வெகுநாட்கள் முன்னர் வெளிவந்தவை. சமீபகால எழுத்தாளர்களில் ஜெயமோகனை தவிர யாரையும் படித்ததில்லை. காரணம் ஒரு தயக்கம், எப்படி இருக்குமோ என்று. ஆர்வி சிபாரிசினால் பெருமாள் முருகனின் இப்புத்தகத்தை வாங்கினேன்.
சினிமா தியேட்டர். தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கம். டூரிங் டாக்கிஸில் ஆரம்பித்து மல்டி ப்ளெக்ஸில் நிற்கின்றது. எங்கள் ஊரில் எங்களது நிலத்தில் ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. நான் மிகச்சிறுவனாக இருந்த போது போன நினைவு வெகு மங்கலாக வருகின்றது. அப்பாவுடன் பல படங்களுக்கு போயிருக்கின்றேன். சிறிய ஒரு அறையில் பெஞ்சு / சேர் (நினைவில்லை), மண் சுவர் தடுப்பிற்கு அந்தப்பக்கம் தரை டிக்கெட். எங்கள் நிலம் என்பதால் சினிமா ஓசி.

அதே தியேட்டர் நகர்ந்து ஊருக்குள் வந்தது. சேர், பெஞ்ச் என்று. இப்போது டிக்கெட் வாங்க வேண்டியிருந்தாலும், சலுகையால் மெயின் கேட் வழி உள்ளே போய்விடுவோம். ஒரு முறை அதிக ஆர்வத்தில் சென்று, முதல் ஷோவின் க்ளைமேக்ஸ் காட்சியை ப்ரொஜெக்டர் ரூமின் ஓட்டை வழியாக பார்த்து கொண்டிருந்தேன். ராஜ சின்ன ரோஜா. சினிமாவிற்கு போவதே பாப்கார்னும், ஐஸ்கீரீமும் சாப்பிடத்தான். ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டுமானால் பக்கத்து ஊர் தியேட்டருக்கு போக வேண்டும், கொஞ்சம் புதிய படம் வரும். தியேட்டரின் திரை தூக்குவதை பார்க்கவும் அப்போது ஒலிக்கும் இசையை கேட்கவுமே எப்போதும் சீக்கிரம் போக வேண்டும் என்று விரும்புவேன். சைட் ஸ்பீக்கரில் திடீர் என்று கேட்கும் ஒலி எப்போதும் குஷிதான்.