12 பிப்ரவரி 2014

ஈராறு கால்கொண்டெழும் புரவி - ஜெயமோகன்

ஜெயமோகனின் மற்றுமொரு நாகர்கோவில் குறுநாவல். ஈராறு கால்கொண்டெழும் புரவி. சித்தர் பாடல்கள், பட்டினத்தார் பாடல்கள் தெரிந்தவர்களுக்கான கதை. பாதிக்கு மேல் ஒன்றும் புரிய வில்லை. குறிப்பாக கடைசி பகுதி, புரிந்தவர்கள் மறக்காமல் இங்கு வந்து என்ன என்று தெரிவிக்கவும். தன்யனாவேன்.

இது போன்ற கதைகள் போரடித்துவிடும், இது அவ்வளவாக போரடிக்கவில்லை. காரணம் அவரின் நடை, ஊடாடும் நகைச்சுவை. மதுரை பக்கத்துக்காரன் என்றாலும், அம்மா வழி தமிழான திருநவேலி தமிழும் கொஞ்சம் பழக்கம், அதனாலோ என்னவோ நாகர்கோவில் தமிழும் பிடித்துவிட்டது. கதையை நான் முழுக்க படித்ததற்கு காரணம் அத்தமிழ்தான்.


சாத்தான்குட்டி பிள்ளையின் ஞானத்தேடல்தான் கதை. சித்தமருத்துவம் படிக்கும் அவர், அங்கிருந்து நீரோட்டத்திற்கு போகின்றார். அதன்பின் என்னவானார்? படித்து புரிந்தவர் யாராவது சொல்லுங்கள். மற்றபடி எனக்கு படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. இரண்டு மூன்று கதைகளை நினைவுபடுத்தியது.

ஈராறு கால்கொண்டெழும் புரவி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக