06 மார்ச் 2013

வாஷிங்டன்னில் திருமணம் - சாவி

வீட்டைக் கட்டி பார், கல்யாணம் செய்து பார் என்ற பழமொழி எக்காலத்திற்கும்  பொருந்தும் போல. இன்று இந்த இரண்டும் காண்டிராக்டர்களால் செவ்வனே நடத்தி முடிக்கப்படுகின்றது. இருந்தும் கல்யாண பையனுக்கு மனைவி மட்டும் அல்ல, கல்யாண காண்டிராக்டரும் அமைவது இறைவன் கொடுத்த வரம். 

காண்டிராக்டர் கையில் அனைத்தையும் கொடுத்துவிட்டாலும், உள்ளே ஒரு டென்ஷன் ஓடிக் கொண்டே இருக்கும். அதை யாரிடமும் தர முடியாது. அந்த கடவுளே வந்து கவலையை விடு நான் பார்த்து கொள்கின்றேன் என்றாலும், நமக்கு அவர் யாரவது ஆதிமூலமே என்று கூப்பிட்டு ஓடிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் இருக்கும். 

இன்றைய விஞ்ஞான வசதிகள் நிறைந்த காலத்திலேயே ஒரு திருமணத்தை நடத்தி வைப்பது இவ்வளவு சிரமம் என்றால், ஒரு ஐம்பது, அறுபது வருடம் முன்பு எப்படி இருக்கும். இங்கு நடக்கும் கல்யாணத்தை அமெரிக்காவில் செய்தால் என்னவாகும்? 

திருவையாறில் வெள்ளைக்காரர்களை பார்த்த சாவி, அதை கொஞ்சம் மாற்றி யோசித்ததன் விளைவு இக்கதை. விகடனில் தொடராக வந்து பெரிய வெற்றி பெற்றது. நாடகமாக கூட வந்துள்ளது என்று நினைக்கின்றேன்.


ராக்பெல்லர் மாமி, ஒரு டிபிகல் தென்னிந்திய திருமணத்தை அமெரிக்காவில் நடத்தி பார்க்க நினைக்கின்றார். அவ்வளவுதான் ஒன்லைன்.

திருமணம் என்றால் சும்மாவா, ஆயிரம் சாஸ்திரகள், பல நூறு அப்பள பாட்டிகள், பேவ்மெண்ட் மகாராஜாக்களான நரிக்குறவர்கள், இது தவிர ப்ளைட் ப்ளைட்டாக பூக்கள், வடுமாங்காய், உரல், உலக்கை. ஷங்கர் பட பிரம்மாண்டம் எல்லாம் இதன் முன் ஒன்றுமில்லை. 

நகைச்சுவை என்பது மறுபடியும் மனதை பொறுத்தது. தென்னிந்திய திருமணம் என்று கூறமுடியாது, தென்னிந்திய பிராமணத் திருமணம். அக்கால கதைகள் அனைத்தும் பிராமணர்களை மையமாக கொண்டதால் இதுவும் அவ்வகையே.

அப்பளம் இடுவதில் ஆரம்பித்து, நகைகள் செய்வது வரை அனைத்தையும் அக்காலத்தில் கல்யாண வீட்டுக்காரர்களே ஓடி ஓடி செய்ததை நினைத்தால் இன்று மலைப்பாக இருக்கின்றது.அக்காலத் திருமணத்தில் இத்தனை கஷ்டங்களா என்று தோன்றியது. நுணுக்கமாக கல்யாண கலாட்டாக்களை கவனித்து அதை அமெரிக்க பிண்ணனியில் அமைத்துள்ளார். ஜானவாச ஊர்வலம், அதற்கு வரும் பெட்ரோமேக்ஸ் லைட், அதை சுமக்கும் நரிகுறவர்கள் (அவர்கள்தான் சுமப்பார்களா என்ன?), சம்பந்தி சண்டை. (பெரும்பாலும் காப்பியில்தான் ஆரம்பிக்கும் !!!)

ஆனாலும் அமெரிக்கர்களை இவ்வளவு பேக்குகளாக காட்டியிருக்க வேண்டாம். அப்பளத்தை கண்டால் ஆச்சரியம், தக்ளியை கண்டால் ஆச்சர்யம், விபூதி பட்டையை கண்டால் ஆச்சர்யம். துணி துவைப்பதை கண்டால் ஆச்சர்யம் என்று முழு பேக்குகளாக்கிவிட்டார். 

நமது உணவு முறைகளும் அமெரிக்கர்களும் நல்ல காம்பினேஷன். 

கதை மிகவும் சிறியது. கதையை விட நான் மிகவும் ரசித்தது கோபுலுவின் ஓவியங்கள். அந்த முக பாவங்கள், வேறு யாருக்கு வரும். கல்யாண கூட்டத்தில் பலர் இருப்பார்கள், ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருப்பார்கள், அப்படிபட்டவர்களை கற்பனை செய்து வரைவது சுலபமல்ல. இதில் வரும் அனைத்து பெரிய ஓவியங்களிலும் ஒவ்வொருவரின் முகபாவனைகளையும் தனித்தனியே பார்த்து பார்த்து ரசிக்க வைப்பவை.

ஓவியங்கள் கீழே. ஸ்கேன் செய்ய வாய்ப்பில்லை. என் மொபைலில் இந்தளவுதான் வருகின்றது.





















பால்ஹனுமான் தளத்தில் 1, 2

3 கருத்துகள்:

  1. ‘வாஷிங்டனில் திருமணம்’ எப்படி நடத்தினேன் ? — சாவி

    http://balhanuman.wordpress.com/2010/05/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA/

    பதிலளிநீக்கு
  2. வாஷிங்டனில் திருமணம் – சாவி

    http://balhanuman.wordpress.com/2010/04/30/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு லின்கையும் பதிவில் இணைத்துவிட்டேன். நன்றி.

      நீக்கு