உதயசூரியன் உதிக்கும் நாடு ஜப்பான். ஜப்பானுக்கு சென்ற ஜானகிராமனின் அனுபவங்கள்தான் உதயசூரியன். ஜப்பானுக்கும் நமது பாரதம் போல நீண்ட பாரம்பர்யம் உண்டு. அணுகுண்டு என்னும் பெரிய அடிக்கு பின் அவர்களின் முன்னேற்றம் அளப்பரியது. எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும், விவசாயத்திலும் அவர்களின் நவீன் உத்திகள் மற்றவர்களை விட ஒரு மேலானாதாகவே இருக்கின்றது.
ஜப்பானில் போய் வத்தல்குழம்பு சாப்பிட்ட கதை மட்டும் இல்லை. ஜப்பானைப் பற்றி பல செய்திகளை கூறுகின்றார். வெறுமனே கூறிக் கொண்டு சென்றால் டாக்குமென்டரி படம் பார்த்த மாதிரி இருக்கும். ஆனால் தி. ஜாவின் பண்பட்ட எழுத்தில் அது அழகான சிறுகதை போல அமைந்துவிட்டது.
கட்டுரை ஏதோ பத்திரிக்கையில் தொடராக வந்துள்ளது போல, ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சின்ன அழகான முடிவுடன் அமைந்துள்ளது. ஜப்பானிற்கு சென்றாலும் அங்கும் நாம் காண்பது மனிதர்களைத்தான். அனைத்து மனிதற்களுக்கும் உள்ள உணர்ச்சிகள் அவர்களுக்கு உண்டு, ஆனால் ஜப்பான் என்னும் தேசம் அவர்களை எப்படி வடித்துள்ளது என்பதை காட்டுகின்றார். அதனுடன் ஜப்பானை பற்றியும் அதன் அழகையும் பழமையையும் நகைச்சுவையுடன் எழுதியுள்ளார்.
ஜப்பான் போக விமானத்தில் ஏறும் போது ஆரம்பிக்கின்றது. விமான பயம் என்பது பொதுவானது, அந்த பயத்துடம் ஆரம்பிக்கும் அவரது பயணம் அதே விமானத்தில் ஒரு அழகான சிறுகதைக்கான முடிவுடன் நிறைவடைகின்றது.
முதல் பகுதியில் விமானத்தில் இருந்து இறங்கி அவரது வழிகாட்டி //உங்கள் ஊர்தான் பின் தங்கி விட்டது // என்று கூறுகின்றார். சரிதான். எத்தனையோ வளமிருந்தும், நாம் பின்தங்கிதான் விட்டோம். அதற்கு ஒரு முக்கியகாரணமாக் கூறுவது, நமது ஆங்கில் மோகம். வெள்ளைக்காரன் சொல்வதை வேதமாக நம்பும் நமது அடிமை மனப்பான்பை. ஜப்பானியர்களுக்கு அது இல்லை, அவர்கள் பெரும்பாலும் வேற்று மொழியை தேவையின்றி கற்பதில்லை. அவர்களது பாரம்பர்யத்தை விடுவதில்லை. நமக்குதான் நமது முன்னோர்கள் எல்லாம் முட்டாள்களாயிற்றே.
மொழிதெரியாத கஷ்டத்தையும், உணவிற்கு அவதிப்பட்டதையும் அவர் கூறும் பொது, அதன் அடிதளமாக இருப்பது, ஜப்பானியர்களின் உணவு பழக்கம், அவர்களது வாழ்க்கை முறை, அவர்கள் மொழியை கையாளும் முறை, வெளிநாட்டவர்களுடன் அவர்கள் பழகும் தன்மை என்பது போன்ற விஷ்யங்கள்.
ஜப்பானியர்களின் அடக்கமான குணம், அவர்களின் விருந்தோம்பல், போன்சாய் மரங்கள், அவர்களின் வீடுகளின் அமைப்பு, இக்கிபானா, தேநீர் உபசாரம் என்று ஜப்பானியர்களின் பாரம்பர்ய பழக்க வழக்கங்களை பற்றி கொஞ்சம் விரிவாக எழுதியுள்ளார்.
ஜப்பானியர்களின் தேநீர் உபசாரத்தை பற்றி படிக்கும் போது ஆச்சரியமளித்தது. ஒரு தேநீர் அருந்துவது என்பதை எத்தனை பெரிய பயிற்சியாக செய்கின்றார்கள் என்பது. நமக்கு அது எல்லாம் சாத்தியமே இல்லை. பேசாமல் ஒரு இடதத்தில் பத்து நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியாது. ஆனால் இந்த ஜென் மரபிற்கு மூலம் நமது நாடு என்பது முக்கிய செய்தி.
புஷிதோ என்னும் அவர்களின் மரபு, ஒரு புரம் நவீன யுகத்தின் அத்தனை மாறுதல்களையும், அத்தனை தொழில் நுட்பத்தையும் மற்ற நாடுகளுக்கு ஒரு படி மேலாக கொண்டுள்ள நாடு. அதே சமயம் அவர்களின் ஆன்மாவின் அடிநாதம் மாறவில்லை. அவர்களில் பெரும்பாலான்வர்கள் எந்த மதத்தையும் தீவிரமாக பின்பற்றுவர்கள் அல்லர், அதே சமயம் அவர்கள் பாரம்பர்யம் மீது வேற்று நாட்டுக்காரன் கட்டுவித்த கதைகளை நம்பி, காறி உமிழ்பவர்களும் இல்லை.
ஜப்பானியர்கள் சினிமா உலகம், அவர்களின் பாரம்பர்ய நோ நாடகம், ஸூமோ விளையாட்டு, என அனைத்தையும் பற்றி விளக்கமாக எழுதியுள்ளார். இது அனைத்து தனியாக் துருத்திக் கொண்டு தெரியாமல் அவரது அனுபவத்துடனே எழுதியுள்ளார்.
ஜப்பானியர்களின் பண்பை ஒரு சில சம்பவங்களின் மூலம் அழகாக காட்டியுள்ளார். தன் மகனுக்கு ஒரு ஆப்பிள் வாங்கி தந்ததற்கு காத்திருந்து நன்றி சொல்லிவிட்டு செல்லும் அப்பா, காரில் வரும் அளவிற்கு வசதியுள்ள ஒரு பிரபுவின் மகள், ஆசிரியரின் நண்பர் அவளை பணிப்பெண் என்று நினைத்து உணவிற்கு ஆர்டர் செய்ய, அவளும் பணிவுடன் தந்துவிட்டு போகின்றாள், தன் முன்னாள் மனைவியுடன் வேலை செய்யும் நிலை இருந்தாலும் அதை பெரிதாக நினைக்காமல் அவளுடன் சகஜமாக் பழகும் அவரது நண்பர், என் அனைவரும் காட்டுவது அவர்களின் பண்பு.
ஜப்பானை விட அதிக பாரம்பர்யமும், பல ஆண்டுகால சரித்திரமும் கொண்டது நம் நாடு. ஆனாலும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் எங்கோ உள்ளது. உடனே ஜாதி ஆரம்பித்து விடுவார்கள். கண்டிப்பாக அது இல்லை வேறு எங்கு நம்மிடம் தவறு நடந்துள்ளது? நமது நாட்டின் மீது நடந்த ஏகப்பட்ட படையெடுப்புகள். அவை முதலில் நமது பொருளாதாரத்தை அழித்தன, அதோடு அவை நமது கலாச்சாரத்தின் மீது நடத்திய விதவிதமான தாக்குதல்கள்தான் நமது இந்த நிலைக்கு காரணம் என்று நினைக்கின்றேன். அதோடு மட்டுமில்லாது நமக்கு உள்ள தாழ்வு மனப்பான்மை, வெள்ளைகாரன் சொல்வதுதான் சரி என்று நம்பும் தன்மை. நமது முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள், அவர்களது நம்பிக்கை எல்லாம் பைத்தியக்காரத்தனம், நமது பாரம்பர்யம் ஒன்றிற்கும் உதவாதது, என்று நினைக்கும் நமது மக்களின் அறிவு. விஞ்ஞானத்தின் பக்கம் வளர்ந்து கொண்டு சென்றாலும், நமது ஆன்மாவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றோம்.
ஆனாலும் அத்தனையும் மீறி இன்னும் கொஞ்சம் நம்பிக்கை உள்ளது. ஒரு உத்தமமான பாரம்பர்யம் அவ்வளவு சுலபமாக தன்னை பலி கொடுத்து விடாது. உலகின் பல இடங்களில் உண்டான எத்தனையோ பழைய நாகரீகங்களை இருந்த இடம் தெரியாமல் செய்ய முடிந்த சக்திகளால், இன்னும் நமது கலாச்சாரத்தை அழிக்க முடியவில்லை. அதற்கான பிரயத்னங்கள் இல்லாமில்லை, அது கொஞ்சம் பலிக்கவும் செய்துள்ளது. ஆனால் முழுவதும் அழிக்க முடியாது.
ஜப்பானை பற்றி அவர் எழுதியுள்ளது, ஜப்பானுடன் சேர்த்து நம் நாட்டைப் பற்றி அதிகம் நினைக்க வைக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக