07 பிப்ரவரி 2014

கன்னிநிலம் - ஜெயமோகன்

வழக்கமாக ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொருவிதமான எழுத்துக்களே கை கூடி வரும். அவர்களின் ஏரியா தாண்டினால் சொதப்பிவிடும். ஆனால் ஜெயமோகனுக்கு எல்லா வகை எழுத்தும் அட்டகாசமாக வருகின்றது.

வெள்ளிக்கிழமை வேலை செய்தால் உடலுக்கு நல்லதில்லை என்பதால், இவர் தளத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். ஏகப்பட்டதை எழுதி குவித்திருக்கின்றார், மூடுக்கு தகுந்தமாதிரி ஒன்றிலிருந்து ஒன்றாக தாவுவது வழக்கம். இன்று இக்கதை. ஆன்லைனில் படிப்பது அவ்வளவாக பிடிக்காது, ஆனால் வேறுவழியில்லை. சமீபத்தில் இப்படி ஒரு விறுவிறுப்பான கதையை படிக்கவில்லை. 

வடகிழக்கு மாநிலத்தில் ஏதோ ஒரு மூலையில், பர்மா எல்லையில் இருக்கும் ஒரு ராணுவ முகாமில் தொடங்கும் கதை, யாருமற்ற நிலத்தில் முடிவடைகின்றது. ராணுவ லெஃப்டினெட் நெல்லையப்பன், காட்டிற்குள் ஒரு போராளி பெண்ணை கைது செய்கின்றான். அவள் மேல் கொண்ட காதலால், காட்டிற்கு அலைந்து, துரோகியாகி, மீண்டும் அவளை அடைகின்றான்.

கதையை மூன்றாக பிரிக்கலாம், முதல் பகுதி ஆக்‌ஷன், இரண்டாம் பகுதி ரொமாண்டிக், கடைசி பகுதி ட்ரமாட்டிக். 


முதல் பகுதியில் அடுத்தடுத்து வரும் சண்டை காட்சிகள், துரத்தல்கள் எல்லாம் அருமையாக வர்ணிக்கப்பட்டுள்ளது. அதில் வரும் ராணுவ விஷயங்கள், குறிப்புகள் எவ்வளவு தூரம் உண்மை, கற்பனை என்று தெரியவில்லை. ஆனால் படிக்க விறுவிறுப்பு. ஜெ.மோவின் உலோகம் த்ரில்லர் என்ற வகையி செர்க்கப்பட்டது, ஆனால் அதைவிட இதுதான் த்ரில்லர். நடுநடுவே வடகிழக்கு மக்கள், அவர்களின் பிரச்சினைகள், போராட்ட குழுக்கள் என்று குட்டி விவரங்கள் உண்டு. கலங்கிய நதி அளவிற்கு இல்லை, இக்கதை அதைப்பற்றியதும் அல்ல.

இரண்டாம் பகுதியில் வரும் காதல் காட்சிகள். ஒருவிதத்தில் எக்ஸ்ட்ரீம் என்று தோன்றுகின்றது. உணர்ச்சி மயமான காட்சிகள். ஒருவனுக்கு ஓரிரு நாளில் இவ்வளவு கிறுக்கு பிடிக்குமா என்றுதான் எனக்கு தோன்றுயது. காடு படிக்கும் போது இப்படிதான் தோன்றியது. அதீத உணர்ச்சி பெருக்கால் பாத்திரங்கள் திரிகின்றனர்.

கடைசி பகுதி முழுக்க முழுக்க நாடகம், யதார்த்தம் என்பதை தாண்டியது. உண்மையில் அப்படி எல்லாம் நடக்குமா என்றால் சந்தேகம்தான். சித்ரவதை காட்சிகள் எல்லாம் உலோக வகைதான். 

நல்ல சினிமாவாக எடுக்கலாம். காட்டிற்குள் சண்டை, ரெண்டு மூன்று டூயட், ஒரு தேசபக்தி பாட்டு கூட வைக்கலாம், மணிரத்தினம் எடுக்கலாம். கதையிலேயே நிறைய இடத்தில் மழை பெய்கின்றது.



2 கருத்துகள்:

  1. படித்ததில்லை. சமீபத்தில் 'அறம்' படித்துதான் அவர் எழுத்தை எனக்கு அறிமுகம் செய்து கொண்டேன். பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறம் வரிசை கதைகளை அனைத்தும் பிரமாதமான கதைகள். புத்தகமாக படிக்கும் போது இன்னும் நன்றாக இருக்கும். ஆன்லைனில் படிப்பதைவிட அது சுகமானது.

      நீக்கு