17 மே 2018

கொம்மை - பூமணி

தலைப்பை பார்த்ததும் அவரது களமான கிராமத்து கதை என்று நினைத்தால், மன்னியுங்கள், தவறு. மகாபாரதம்.

மகாபாரதத்தை பூமணி அவரது வட்டார வழக்கில் எழுதியிருக்கின்றார். பீமன் குந்தியை பார்த்து, "நீ வந்து சோத்த போடாத்தா" என்று குஷியாக பேசுகின்றான்.

மகாபாரதத்தை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே தந்திருக்கின்றார். வழக்கமாக அனைவரும் செய்யும் வகையில், மகாபாரதத்தின் சில சிக்கலான இடங்களை லாவகமாக குதித்து செல்கின்றார். விதுரன் வந்து சென்ற பின் தர்மன் பிறப்பது, திருதராஷ்டிரன் வந்து சென்ற பின் பீமன் பிறப்பது என்று போகின்றது.

பெண்களின் துயர் சொல்லும் கதை என்று அப்படி இப்படி சொன்னாலும், அது ஏதுமில்லை. கிருஷ்ணனும் அர்ச்சுனனும், வாலே போலே என்று பேசிக் கொள்வதை தவிர வேறு ஏதுமில்லை.

இதிகாசங்களை தரைக்கு கொண்டுவரும் முயற்சி என்றாலும் இது அந்த வகையிலும் சேரவில்லை. ஒட்டாமல் இருக்கின்றது.

பர்வம், இரண்டாமிடம் போன்றவை பாரதக்கதையை வேறுவிதமாக சொன்ன கதைகள். இது இரண்டுங்கட்டான போய்விட்டது.

பூமணியின் ஆடுகளம் அவர் மண்ணின் மைந்தர்கள்தான். இறக்குமதி செய்தவர்கள் மண்ணில் ஒட்டமாட்டார்கள்.

3 கருத்துகள்:

  1. எழுத எவ்வளவோ பல விசயங்கள் இருக்கும்போது இப்படி ஆண்டாண்டுகாலமாக இராமயணம், மகாபாரதமும் மீள் உருவாக்கம் செய்யப்படவேண்டியதன் அவசியம் என்னவோ.

    பதிலளிநீக்கு
  2. மீள் உருவாக்கம் செய்யலாம். அதில் ஏதாவது ஒரு புதிய கோணம் இருக்க வேண்டும். இரண்டாமிடம் என்பது எப்போது தர்மசங்கட விஷயம், முந்தவும் முடியாது, பொறுப்பை தட்டி கழிக்கவும் முடியாது. பீமனின் இடம் அது. அதைவைத்து ரெண்டாமிடம் எழுதினார் வாசுதேவன் நாயர். பர்வா பாரதத்தை ஒரு வரலாறாக எழுத செய்யப்பட்ட முயற்சி, நித்தியகன்னி, பாரதத்தில் வரும் ஒரு பெண்ணைப் பற்றிய விரிவான கதை. வெண்முரசு, பாரதம் வழியாக பல தத்துவங்கள் என்று போகின்றது. இது ஏதுமின்றி, வட்டாரவழியில் சொல்வது என்பதி எவ்வித புதுமையும் இல்லை, ஏனென்றால பாத்திரங்கள் பேசுவது மட்டுமே அந்த மொழி, கதை சொல்லியின் மொழி புராண மொழி. பாரதத்தை பற்றி கிராமத்து கதைகளை சேர்த்திருந்தால் கூட கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. //ஏனென்றால பாத்திரங்கள் பேசுவது மட்டுமே அந்த மொழி, கதை சொல்லியின் மொழி புராண மொழி// ஓ , அப்படியா. நான் முழுவதுமாக வட்டார வழக்கு என நினைத்திருந்தேன். உண்மைதான் அப்படி எழுதியிருந்தாலாவது எளிமைப்படுத்தி இருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம்.

    25 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட, பாரதமும், நல்லதங்காள் கதைகளும் வாய்வழியே பாடப்பட்டு பாமர மக்களுக்கு சென்று சேர்ந்தன. இப்போது காட்சிகள் மாறிவிட்டன.

    பதிலளிநீக்கு