27 அக்டோபர் 2018

சோவின் சில புத்தகங்கள்

ஒசாமஅசா

இது போன்று தலைப்புகள் எல்லாம் இந்த மனிதருக்குத்தான் தோன்றும். சோவின் அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் தொடரின் நீட்சி என்று இதை  சொல்லலாம். அந்த தொடரில் வந்த பல சம்பவங்கள் இதிலும் இருக்கின்றன. அதில் வந்த சில சம்பவங்களின் நீட்சியும் உண்டு.  உண்மையில் சோவிற்கு அதிர்ஷ்டம் என்பது உண்டு, அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதிர்ஷ்டம் தந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள், ஒசாம அசா இரண்டையும் சேர்த்து ஒரே புத்தகமாக மாற்றலாம். செலவு குறையும்.

திரையுலகை திரும்பிப்பார்க்கின்றேன்

சோவின் திரையுலக அனுபவங்கள். அதிக சுவாரஸ்யம் ஏதுமில்லை. முடிந்தவரை யாரையும் புண்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில்  எழுதியிருக்கின்றார். கட்டுரைகளை விட, இணைப்பாக வந்திருக்கும்  ஒரு நான்கு வயது மாணவன் தேர்வு எழுதப்போகும் கதை படும் பாடு சுவாரஸ்யம். பல நாள் கழித்து பயங்கரமாக சிரித்து, வீட்டு கொலுவிற்கு வந்தவர்கள் பீதியடைய காரணமாக இருந்தது.

காமராஜரை சந்தித்தேன் 

காமராஜரை பற்றிய ஒரு நல்ல சித்திரம் உண்டாக்கும் கட்டுரைத் தொகுப்பு. காமராஜர் இறந்த வேகத்தில் எழுதியதால் வழக்கமான பாணியில் இல்லாமல், வெகுவாக உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்கின்றார். கட்டுரையும் சட்டென்று முடிந்தது போன்ற உணர்வு. காமராஜரைப் பற்றி பலர் எழுதிய கட்டுரைகளும் சேர்ந்துள்ளது. 

இன்றைக்கு மீம்ஸ் மட்டும் படித்துவிட்டு அரசியல் புளிகளாக இருப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. அரசியல் என்பது எப்படி இருந்து இன்றைய கதியை அடைந்திருக்கின்றது என்பதை காட்டும் கட்டுரைகள்.

2 கருத்துகள்:

  1. //அரசியல் என்பது எப்படி இருந்து இன்றைய கதியை அடைந்திருக்கின்றது என்பதை காட்டும் கட்டுரைகள்.// சிந்திக்க வேண்டிய ஒன்று. தடி எடுத்தவன் எல்லாம் ..என்பதே இன்றைய நிலை.

    மரணத்துக்குப் பிறகு காமராஜர் கொண்டாடப்படுவார் என அப்போதைய தலைமுறை சரியாக கணித்ததா எனத் தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றும், இன்றும் பேச்சில் மயங்கும் கூட்டம்தான் அதிகமாக இருக்கின்றது. அடுக்கு மொழிக்கு பதில் இன்று வடிவேலு வசன மீம்ஸ்.

      நீக்கு