எச்சரிக்கை
இது ஒரு சொந்த அனுபவம். அங்கங்கு என் கற்பனை ஊற்றை (????) கொண்டு மறந்து போன இடைவெளியை நிரப்பியுள்ளேன். ஏதாவது ஒரு கல்யாணப் பத்திரிக்கையை பார்த்தால் என் மனதில் வந்து போகும் இச்சம்பவத்தை எழுதிப்பார்த்தால் என்ன என்று முயற்சி செய்து பார்த்தேன். சனி ஞாயிறு வீட்டில் தனியாக வெட்டியாக அமர்ந்து பொழுதைப் போக்கினால் வேறு என்ன தோன்றும்?
முயற்சி கொஞ்சம் மோசமாகவோ இல்லை மிக மோசமாகவோ இருக்கலாம். படித்துவிட்டு மன உளைச்சல் அடைபவர்கள் (66A எல்லாம் உதவாது இதற்கு), அடுத்த முறை இது போன்ற எச்சரிக்கையை படித்து விட்டு தப்பிக்கவும். சொற்குற்றம் இருந்தால் மன்னிக்க.
சொந்தக் கதை எழுதும் போது கண்டிப்பாக இது போன்ற எச்சரிக்கை இருக்கும். டோண்ட் ஒர்ரி. பயப்பட வேண்டாம் அடிக்கடி இது போல் நிகழாது.
26 நவம்பர் 2012
24 நவம்பர் 2012
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
சில வருடங்களுக்கு முன்பு அலுவலகத்தில் வேலை வெட்டி ஏதுமில்லாத போது சேகரித்தது. சென்னை லைப்ரேரி தளத்தில் தனித்தனி பக்கங்களில் இருந்ததை அடிக்கடி கிளிக்கி கிளிக்கி படிக்க சோம்பல் பட்டுக் கொண்டு, ஒரே நாளில் காப்பி பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டேன்.
முழுவதும் படித்ததில்லை. படித்த சிலவும் எனக்கு அவ்வளவாக பிடித்ததாகவும் இல்லை. ஒன்றிரண்டு கதைகள் நன்றாக இருந்தன. ஒரு விதமான எள்ளல் தொனியுடனே கதைகள் இருப்பது போல் தோன்றியது.
எனக்கு கணிணி திரையில் படிப்பது அலுப்பூட்டுவதாக உள்ளது. எப்போதாவது பொழுது போகாவிட்டால் படிப்பதற்காக வைத்துள்ளேன்
புதுமைப்பித்தன் கதைகள் பகுதி 1
புதுமைப்பித்தன் கதைகள் பகுதி 2
புதுமைப்பித்தன் கதைகள் பகுதி 4
புதுமைப்பித்தன் கதைகள் பகுதி 5
புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு கதைகள்

முகம்மது பின் துக்ளக் - சோ
சோ இவரை எந்த வகையில் சேர்ப்பது. எழுத்தளாரா, பத்திரிக்கையாளரா, நாடக ஆசிரியரா, சினிமா நடிகரா, நாடக நடிகரா, அரசியல்வாதியா, வழக்கறிஞரா, இயக்குனாரா? எல்லா துறைகளிலும் காலைவைத்துள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார். நடுநிலைமை என்றால் சோ என்று கூறப்படும். இப்போது அதிமுகவிற்கு பாஜக விற்கும் அதிகம் சப்போர்ட் செய்வது போல்தான் தோன்றுகின்றது.
தமிழ்நாட்டின் நாடக உலகில் சோ ஒரு முக்கிய மைல் கல். இன்று நாடகம் நடத்து கிரேஸி மோகன், மெளலி போன்றவர்களுக்கு இன்ஸ்பெரெஷன். சில வருடங்களுக்கு முன்பு அவர் மீண்டும் நாடகம் போட்ட போது அரங்கு நிறைந்தது. பெரும்பாலனவர்கள் இளைஞர்கள்.
அரசியல் கலந்த நாடகங்களை எம்.ஆர். ராதாவிற்கு பின் வெற்றிகரமாக நடத்தியவர் சோ. சோவின் நாடகங்களும் பலத்த கலவரங்களுக்கு நடுவில் நடந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டுள்ளேன். படம் வெளிவந்த போது கலட்டா நடந்துள்ளது.
22 நவம்பர் 2012
விழா மாலைப் போதில் - அசோகமித்திரன்
கிழக்கு வெளியிட்டுள்ள குறுநாவல் தொகுப்பு. மொத்தம் நான்கு குறுநாவல்கள்.
பெரும்பாலன புத்தகங்கள் எல்லாம் ஏற்கனவே அவசர கதியில் படித்தவை. இப்போது அனைத்தும் இரண்டாம் ரவுண்ட்.
1. இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
2. விழாமாலைப் போதில்
3. என்றும் இன்று
4. மணல்
இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
ஒரு சிறுவனுக்கும் ஒரு இன்ஸ்பெக்டருக்கும் இடையிலான நட்பை பற்றிய கதை. ஐந்தாவது பாரம் படிக்கும் ஒரு சந்திரசேகரன் கூடப் படிக்கும் சினேகிதன் காந்திமதி. காந்திமதியின் மாமா இன்ஸ்பெக்டர் செண்பகராமன். ஒரு நாள் காந்திமதியுடன் வீடு திரும்பும் சந்திரசேகரனை சந்திக்கும் செண்பகராமன், அவனைப் பிடித்து போக அவனுடன் நட்பாகின்றார்.
சினிமாவிற்கு சந்திரசேகரனின் குடும்பத்தை அழைத்து செல்கின்றார், அவன் உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றார். அதோடு அவனை வேறு ஒரு இடத்திற்கும் அழைத்து செல்கின்றார். அந்த இடத்தில் இருக்கும் பெண், செண்பகராமனின் மனைவிக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவளாக இல்லை.
ஒரு நாள் செண்பகராமன் இறந்து போகின்றார். செண்பகராமன் தொடர்பில் இருக்கும் பெண்ணை பார்க்க விரும்புகின்றார், அது நிறைவேறாமல் இறந்து போகின்றார். அந்த பெண்ணை கண்டு சந்துரு செண்பகராமன் குடுத்த பணத்தை தந்துவிட்டு விஷயத்தை சொல்கின்றான். கதை முடிந்தது.
இந்த சந்துருவும் 18ம் அட்சக்கோடு சந்துருவும் ஒரே ஆள் என்ற எண்ணம் தோன்றுகின்றது. அவனின் நாடக அனுபவம், லான்சர் பாரெக்ஸ் எல்லம் அதே போல் உள்ளது. மிகச்சிறிய கதை, கொஞ்சம் பெரிய சிறுகதை என்றுதான் சொல்ல வேண்டும்.

18 நவம்பர் 2012
ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா
சாரு நிவேதிதாவின் பத்திகளை விகடனில் படித்ததுண்டு. அவரின் தளத்திலும் படிப்பதுண்டு. அவரின் எழுத்து நடை, சொல்வதை மிக எளிமையாக சொல்வதும் எனக்கு பிடிக்கும். உள்ளடக்கம் சில சமயம் எரிச்சலாக இருக்கும், ஆனாலும் சுவாரஸ்யமான நடைக்கு சொந்தக்காரர். சில சிறுகதைகள் மிகச் சிறப்பாக இருக்கும்.
ஜீரோ டிகிரி புத்தகத்தை பலரும் ஆஹோ, ஓஹோ என்று பாராட்டுகின்றார்களே என்று வாங்கினேன். பல முறை படித்து விட்டேன். ஒரு எழவும் புரியவில்லை. இதைப் பாராட்டுபவர்கள் இதைப் பற்றி எழுதுவது அதைவிட குழப்பமாக உள்ளது. //முதலில் படித்தேன் புரியவில்லை சனிகிழமை மட்டும் புரியும், இருவது வயதில் புரியவில்லை, இருபத்திரண்டு வயதில் புரிகின்றது//. கடவுள், இசை, ஆன்மீகம் என அனைத்தையும் அதனுடன் சம்பந்தப்படுத்தி பேசுகின்றனர். அப்புத்கத்தின் ஒவ்வொரு அந்தியாயத்திற்கும் பிண்ணனி இசை அமைக்கின்றனர். இது ஏதோ பல்கலை கழகத்தில் பாடபுத்தகமாக உள்ளாதாம்!
நான் லீனியர் புத்தகம் என்பதால் நாமும் நான் லீனியராக படிக்க வேண்டும் போல என்று, கையில் கிடைத்த பக்கங்கள், கடைசி அந்தியாயத்திலிருந்து முதல் அந்தியாயம் வரை (நம்புங்கள், நிஜமாகவே செய்து பார்த்தேன்) படித்து பார்த்தாகி விட்டது. அப்படி ஏன் படிக்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு; என் மூளைக்கு இதை புரிந்து கொள்ளும் சக்தி இல்லையா என்று எனக்கு சந்தேகம வந்து விட்டது. எனக்கான சவாலாக தோன்றியது. கடைசியில் தோல்வியை ஒத்துக் கொள்ள வேண்டிய நிலைதான் வந்துள்ளது.
மெமெண்டோ பாணியில் படிக்க வேண்டுமோ என்னவோ அது ஒன்றுதான் பாக்கி.
இப்புத்தகத்தை பற்றி "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்னும் கதைதான். அனுபவித்தால்தான் புரியும் என்கின்றனர்.
ஒழுக்கமானவர்களுக்குதான் ராஜாவின் உடை கண்ணிற்கு தெரியும் என்பது போல ஆகிறதோ என்ற சந்தேகம். ஜெயமோகன் இதை தமிழின் முக்கிய முயற்சி என்கின்றார். அவரின் விஷ்ணுபுரம் கூட என்றாவது ஒரு நாள் முழுவதும் புரியும் என்ற நம்பிக்கை உள்ளது, ஆனால் இது .....
உண்மையில் இதை யாராவது விளக்க முடியுமா?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)