22 நவம்பர் 2012

விழா மாலைப் போதில் - அசோகமித்திரன்

கிழக்கு வெளியிட்டுள்ள குறுநாவல் தொகுப்பு. மொத்தம் நான்கு குறுநாவல்கள்.

பெரும்பாலன புத்தகங்கள் எல்லாம் ஏற்கனவே அவசர கதியில் படித்தவை. இப்போது அனைத்தும் இரண்டாம் ரவுண்ட்.

1. இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
2. விழாமாலைப் போதில்
3. என்றும் இன்று
4. மணல்

இன்ஸ்பெக்டர் செண்பகராமன்

ஒரு சிறுவனுக்கும் ஒரு இன்ஸ்பெக்டருக்கும் இடையிலான நட்பை பற்றிய கதை. ஐந்தாவது பாரம் படிக்கும் ஒரு சந்திரசேகரன் கூடப் படிக்கும் சினேகிதன் காந்திமதி. காந்திமதியின் மாமா இன்ஸ்பெக்டர் செண்பகராமன். ஒரு நாள் காந்திமதியுடன் வீடு திரும்பும் சந்திரசேகரனை சந்திக்கும் செண்பகராமன், அவனைப் பிடித்து போக அவனுடன் நட்பாகின்றார்.

சினிமாவிற்கு சந்திரசேகரனின் குடும்பத்தை அழைத்து செல்கின்றார், அவன் உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றார். அதோடு அவனை வேறு ஒரு இடத்திற்கும் அழைத்து செல்கின்றார். அந்த இடத்தில் இருக்கும் பெண், செண்பகராமனின் மனைவிக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவளாக இல்லை.

ஒரு நாள் செண்பகராமன் இறந்து போகின்றார். செண்பகராமன் தொடர்பில் இருக்கும் பெண்ணை பார்க்க விரும்புகின்றார், அது நிறைவேறாமல் இறந்து போகின்றார். அந்த பெண்ணை கண்டு சந்துரு செண்பகராமன் குடுத்த பணத்தை தந்துவிட்டு விஷயத்தை சொல்கின்றான். கதை முடிந்தது.

இந்த சந்துருவும் 18ம் அட்சக்கோடு சந்துருவும் ஒரே ஆள் என்ற எண்ணம் தோன்றுகின்றது. அவனின் நாடக அனுபவம், லான்சர் பாரெக்ஸ் எல்லம் அதே போல் உள்ளது.  மிகச்சிறிய கதை, கொஞ்சம் பெரிய சிறுகதை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு நடுத்தரவயது போலிஸ்க்காரர் எதற்கு ஒரு சிறுவனுடன் அவ்வளவு நெருக்கமாக பழகவேண்டும் என்பது தெளிவாக இல்லை. ஒரு சிறுவனை தான் போகும் எல்லா இடத்திற்கும் அழைத்து செல்வாரா என்ன?

இது ஒரு சாதரணக் கதை என்றுதான் எனக்கு படுகின்றது.

விழா மாலைப் போதில்

சுந்தர்ராஜன் ஒரு பத்திரிக்கையாளர், அவருக்கு ஹைதராபாத்தில் நடக்கும் உலக சினிமா விழாவைப் பற்றி ஒரு பத்திரிக்கையில் எழுத அழைப்பு வருகின்றது. அவருடன் கரம்சந்த் என்னும் முன்னாள் பத்திரிக்கையாளர், ஒரு புரொபசர் சேர்ந்து கொள்கின்றனர். ஹைதராபாத் போகும் வழியில் அவர் எழுதப் போகும் பத்திரிக்கையின் ஆசிரியர் பெண்ணை சந்திக்கின்றார். சுந்தர்ராஜன் பேட்டி காணப்போகும் ஜெயதேவி என்னும் நடிகை அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவள். ஜெயதேவியின் பேட்டியை தருவதுடன் கதை முடிகின்றது.

இதற்கு நடுவில் சுந்தர்ராஜனின் குடும்பம், தங்கை எல்லாம்.

ஒரு ஆரம்பம், ஒரு முடிவு என்பது போலல்ல இது. ஒரு சிறிய எபிசோட். முன்னும் பின்னும் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். சினிமாவின் மற்றுமொரு முகத்தை காட்டுகின்றார். இதில் அவரது வழக்கமான கேலி, கிண்டல் எல்லாம் சரியாக அமர்ந்திருக்கின்றது. ஏனோ இது என்னை அந்தளவிற்கு கவரவில்லை.

என்றும் இன்று

சுத்தமாக எனக்கு புரியவில்லை. என்றாவது நிதானமாகப் படித்தால் புரியுமோ என்னவொ? இதை தலைப்பைப் பார்த்து ஏமாந்து இரண்டாம் முறை வேறு வாங்கி வைத்துள்ளேன்.

மணல்

இத்தொகுப்பில் என்னை பெரிதும் கவர்ந்த கதை.

சரோஜினி ஒரு சாதாரண் நடுத்தரவர்க்கத்து பெண். இரண்டு அக்காக்கள், இரண்டு அண்ணன்கள். ஒரு அவளின் அம்மா இறந்து போகின்றார். அக்காக்கள் அம்மாவின் நகைகளை பங்கு போட, ஒரு அண்ணன் நிம்மதியாக கல்யாணம் செய்து கொண்டு போகின்றான். மற்றொருவன் பொறுப்பிற்கு பயந்து கொண்டு திருமணத்தைக் கண்டு மிரள்கின்றான். படிப்பு நிறுத்தப்பட்ட சரோஜா என்னவானாள்? கடைசி வரியில் ஒரு திருப்பம்.

குடுமத்தின் அச்சானவள் இல்லாது போனால் வீடு என்னவாகும் என்பதை அழக்காக காட்டுகின்றார். பெண்களின் உலகம் அது தனி. பிறந்த வீட்டிற்கு வரும் பெண், கணவன் வீட்டில் கிடைக்காத சுதந்திரத்தை காணுகின்றாள். பெரும்பாலான் வீடுகளில் அவர்கள் வந்தால் அதிகாரம் தூள் பறக்கும் இது ஒரு வகை. மற்றொன்று அதிகாரத்திற்கு பதில் அழுகை, பரிதாபத்தை சம்பாதிப்பது.

ஒரு காலகட்டத்திற்கு மேல் அனவருக்கும் தன் சுயநலம் பெரிதாகின்றது. குடும்பநலம் என்பது இரண்டாம்பட்சம். அம்மா இறந்ததும் நகைகளை பங்கு போடும் சகோதரிகளுக்கு அடுத்து திருமணத்திற்கு காத்துக் கொண்டிருக்கும் சகோதரி கண்ணில படவில்லை. அம்மாவின் காரியமன்று திருமணம் செய்து கொள்ளும் பையனுக்கும் தன் அண்ணனின் திருமணம் கண்ணில் படவில்லை. சிலரின் சுயநலத்தினால் பலரின் கனவுகள் பாழாகின்றது.

இயல்பான உரையாடல்கள், யாரும் பக்கம் பக்கமாக பேசுவதில்லை. சாதரண உரையாடல்களிலும், சிறு சிறு வாக்கியங்களிலும் பல விசயத்தை பேசுகின்றார்

மணலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றுதான் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக