24 நவம்பர் 2012

முகம்மது பின் துக்ளக் - சோ

சோ இவரை எந்த வகையில் சேர்ப்பது. எழுத்தளாரா, பத்திரிக்கையாளரா, நாடக ஆசிரியரா, சினிமா நடிகரா, நாடக நடிகரா, அரசியல்வாதியா, வழக்கறிஞரா, இயக்குனாரா? எல்லா துறைகளிலும் காலைவைத்துள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார். நடுநிலைமை என்றால் சோ என்று கூறப்படும். இப்போது அதிமுகவிற்கு பாஜக விற்கும் அதிகம் சப்போர்ட் செய்வது போல்தான் தோன்றுகின்றது.

தமிழ்நாட்டின் நாடக உலகில் சோ ஒரு முக்கிய மைல் கல். இன்று நாடகம் நடத்து கிரேஸி மோகன், மெளலி போன்றவர்களுக்கு இன்ஸ்பெரெஷன். சில வருடங்களுக்கு முன்பு அவர் மீண்டும் நாடகம் போட்ட போது அரங்கு நிறைந்தது. பெரும்பாலனவர்கள் இளைஞர்கள்.

அரசியல் கலந்த நாடகங்களை எம்.ஆர். ராதாவிற்கு பின் வெற்றிகரமாக நடத்தியவர் சோ. சோவின் நாடகங்களும் பலத்த கலவரங்களுக்கு நடுவில் நடந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டுள்ளேன். படம் வெளிவந்த போது கலட்டா நடந்துள்ளது.


துக்ளக் இன்று வந்து ஆட்சி செய்தால் என்ன நடக்கும் என்பது கதை. ஒன்றும் பெரிதாக வித்தியாசம் தெரிந்து விடாது என்பதுதான் உண்மை. இரண்டு நண்பர்கள் துக்ளாகவும், பதுதாவாகவும் வேடமிட்டு இந்திய அரசியல் நிலையை மக்களுக்கு காட்ட களமிறங்குகின்றனர். துக்ளக் இந்தியாவின் பிரதம் மந்திரி ஆகின்றார், உடன் 450 உதவிப் பிரதம மந்திரிகள். பல பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன, துக்ளக் வழியில். கடைசியில் துக்ளக் வேடம் மகாதேவனை முழுவதும் ஆக்கிரமிக்கின்றது.

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் எழுதப்பட்டது, இன்றும் அதன் நிறம் மங்காமல் உள்ளது. அதற்கு காரணம் நமது அரசியல்வாதிகளும் மக்களும்.

இந்நாடகத்தில் அனைவரும் கிண்டலடிக்கப்படுகின்றார்கள். இந்திரா காந்தி, ஈ.வே.ரா, காங்கிரஸ், திராவிட கட்சிகள், கம்யூனிஸ்டுகள் எவரையும் விடவில்லை. 

சில சாம்பிள்கள்

//என்ன அவ இப்படி பேசறா?, எப்போ அவளுக்கு இந்திரான்னு பேர் வச்சோமோ //

//ஈ.வே.ரா பிள்ளையார் சிலையை உடைச்சார், ஊரெங்கு பிள்ளையார் கோவில்//

//உதாராணத்திற்கே ரஷ்யாவிற்கு சீனாவிற்கும் போகும் நீங்கள் மொழிக்கும் அயல் நாடு போங்கள்//

//அரசியல் ஒரு சாக்கடை அதில் எது வேண்டுமானாலும் கலக்கலாம்//

//நாட்டைப் பற்றி சிந்திப்பவன் தலைவன், எதைப் பற்றியும் சிந்திக்காதவன் அரசியல்வாதி, நான் ஒரு அரசியல்வாதி//

//மக்களுக்குத் தேவை வாக்குறுதிகள் அவ்வளவுதான்//

//ரமேஷ் மிக நல்லவர், நல்லவர்கள் பார்லிமெண்டிற்கு செல்லலாமா?//

//எங்கள் மாணவர்கள் படிப்பது எல்லாம் பேத்தலா? அதை அவர்களைப் பார்த்தாலே தெரியும்//

மேடையில் நடிக்கும் போது இன்னும் டைனமிக் வசனங்களும் சேர்க்கப்பட்டிருக்கும் சினிமாவில் இன்னம் சில கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒரு சமூக நாடகம் பெரும்பாலும் அது எழுதப்பட்ட காலத்தை பிரதிபலிக்கும், நம்முடைய அரசியல்வாதிகள் நாற்பதுஆண்டுகளுக்கு மேலாகியும், இந்நாடகத்தை சமகாலப் பிரதியாக வைத்துள்ளனர். சோ அவர்களுக்கு நன்றி கூறத்தான் வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக