25 ஏப்ரல் 2014

கதை, வெறும் கதை

இரவு ஏழு மணி

வெளிச்சமில்லா சாலையில் சைக்கிளில் போய் கொண்டிருந்தவன் மீது வேகமாக மோதியது ஒரு மோட்டார் சைக்கிள்

பறந்து சென்று ஒரு மரத்தில் மோதி விழுந்தான்.

எட்டு மணி

இறந்து போனான்

ஒன்பது மணி

யாரோ ஒருவன் அவனை பார்க்காமலேயே கடந்து சென்றான்



பத்து மணி

அருகில் வந்து பார்த்து விட்டு போய்விட்டான் ஒருவர்ன்

பதினொன்று

ஒரு கார் நின்று அவனை பார்த்துவிட்டு வேகமாக கடந்து போனது.

பன்னிரெண்டு

யாரும் வரவில்லை
.
.
.
.
.
.

சைக்கிளில் ஏறி சென்று அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்று தானே ஒரு படுக்கையை கண்டு விழுந்தான். இறந்து விட்டான்.


(இது எங்கோ படித்த கதையா இல்லை கேட்ட கதையா தெரியவில்லை. இது போன்று ஒரு கதை தோன்றியது. கனவில் கூட வந்திருக்கலாம், எப்போதோ எங்கேயோ கேட்டிருக்கலாம், இல்லை கற்பனையில் வந்திருக்கலாம். தானே வந்த வெறும் கதை. எழுதி வைப்பது கடமை)

1 கருத்து: