27 நவம்பர் 2015

சம்ஸ்காரா - யூ. ஆர். அனந்தமூர்த்தி

மோடி பிரதமரானால் நாட்டை விட்டு செல்வேன் என்று சூளுரைத்தவர் என்பதே இவரை பற்றிய அறிமுகம். நாட்டை விட்டு எல்லாம் செல்லவில்லை என்பது வேறு கதை. தேர்தல் சமயத்தில் கூறுவதை எல்லாம் சீரியசாக எடுத்து கொள்ளலாமா. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மறைந்துவிட்டார். அவரின் புகழ் பெற்ற நாவல். பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

சம்ஸ்காரா என்றால் தகனம் என்றும் சொல்லலாம், ஆச்சார அனுஷ்ட்டானங்கள் என்றும் சொல்லலாம். இதில் இரண்டுமே இருப்பதால், அதற்கேற்ற தலைப்புதான். இதை ஒரு குறியீட்டு நாவல் என்கின்ற்னர்.

பழமைக்கும் அதை எதிர்த்து கிளம்பும் கலகத்தை பற்றியதுமானது எனப்படுகின்றது. இதை யாரும் அந்தளவிற்கு விளக்கமலே புரிகின்றது. குறியீட்டு நாவல் என்று தெரிந்து கொண்ட பின் எல்லாவற்றிலும் அதை தேட வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டு என் வழியில் படித்ததை பற்றி மட்டுமே இங்கே


பிராணேஸாச்சாரியார் (இனிமேல் ஆச்சாரியார் என்றே குறிப்பிட முடியும், டைப்படிக்க மிகவும் கஷ்டமாகவும், குழப்பமாகவும் உள்ளது) மிகவும் ஆச்சார சீலர். அவரது தவ வலிமை கொண்டு அவருக்கு நேர் எதிராக நடக்கும் நாரணப்பாவை திருப்ப முடியும் என்று நம்பும் அளவிற்கு நம்பிக்கையாளர். நாரணப்பா ஆச்சாரியாரை தன் வசம் திருப்ப முயலும் அவரின் ஆடிப்பாவை (நன்றி ஜெயமோகன்)

இறுதியில் யார் ஜெயித்தது? 

நாரணப்பா இறந்து போகின்றான், அவன் பிராமணனாக இறந்தவன் என்றாலும் பிராமணத்துவத்தை விட்டவன் என்பதால் அவன் தகனத்தை யார் செய்வது என்ற குழப்பம் பிராமணர்களிடையே. ஆச்சார்யார், தன் கல்வியால அதற்கு வழி தேட முடியும் என்று நம்புகின்றார். சொல்லப்போனால் அவரது அகங்காரமும் சேர்த்தே அதை செய்கின்றது. ஆனால வழி கிடைக்கவில்லை, மாருதியும் வழிதரவில்லை. பிணம் நாறுகின்றது.

நாரணப்பா இறந்ததற்கு காரணம் ப்ளேக். அது ஊரில் பரவி ஒவ்வொருவரையாக பலி கொள்ள ஆரம்பிக்கின்றது. ஆச்சார்யாரின் உள்ளே இருக்கும் நாரணப்பா கொஞ்ச நேரம் வெளியே வந்துவிட்டு போகின்றான். ஆச்சாரியார், வேறு வழியின்றி மீண்டும் தன் வழிக்கே திரும்பி செல்வதுடன் கதை முடிகின்றது.

ஆச்சாரியார் பிராமணத்துவத்தின் பிரதிநிதியாகவே வருகின்றார். நாரணப்பாவால், ஆச்சார்யாரை கொஞ்சம் அசைக்க முடிந்திருக்கின்றது, அதுவிம் அவருள் இருந்ததே. தக்க இடத்தில் தூண்டப்படுகின்றது.நாரணப்பா, பிராமணத்துவத்திற்கு எதிராக எழுந்த குரலாக காட்டப்படுகின்றார். ஆனாலும் நாரணப்பாவிற்கு உள்ளே ஆச்சாரியார் இருந்து கொண்டேதான் இருக்கின்றார், அவன் செய்யும் அனைத்து அதை மறைக்கவே. ஓரளவிற்கு இது உண்மை, உதாரணத்திற்கு நாத்திகம், முற்போக்கு பேசுபவர்களில் கவனித்தால், பிராமணர்களே தங்களை முரட்டுத்தனமாகவும், மிகவும் வெளிப்படையாகவும், தேவையற்ற இடங்களில் நானும் நாத்திகன் பாருங்க என்று கூவிக் கொண்டு திரிவார்கள். உதாரணம் கமல்.  

அனந்தமூர்த்தியே அப்படிப்பட்ட ஒருவர்தான் என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. நாவலில் வரிக்கு வரி, அய்யா பிராமணீயத்தை காப்பாத்துங்கோ, காப்பத்துங்கோ, பிராமணீயம் முக்கியம், பிராமணீயத்தை விட முடியாது. படிக்கவே ஆயாசமாக இருக்கின்றது. ப்ளேக் நோயை பற்றி அந்தளவிற்கு ஒன்றும் தெரியாத மண்டூகங்களாகவா இருப்பார்கள் என்ற எண்ணம் வராமல் போவதில்லை.ஆனால் இது குறியீட்டு நாவல் இல்லையா, நீங்கள் என்ன வேண்டுமானலும் நினைத்து கொண்டு படிக்கலாம். 

ஊரைவிட்டு போகும் ஆச்சார்யாருக்கு கிடைக்கும் அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. நாரணப்பாவின் பிணத்தை வைத்துக் கொண்டு உறவினர்கள் போடும் சண்டையும், அவர்களின் ஆசையும் இயல்பாக வெளிப்படுகின்றது. எனக்கு உறுத்துவது ஒரு விஷயம் கலகத்தின் குரலாக காட்டப்படும் நாரணப்பா என்ன செய்கின்றான் என்றால், குடிக்கின்றான், பெண்ணை திருமணம் செய்யாமல வைத்துக் கொண்டிருக்கின்றான், மாமிசம் உண்கின்றான். இது எல்லாம் என்ன கலகம். இன்று பலரும் செய்வதுதான். வாழ்க்கையைஅனுபவிக்கும் தன்மை என்ற குறியீடோ??

மோடி பற்றிய அவரது உளறல்களே அவர் மீது ஒருவித மதிப்பும் இல்லாமல் செய்து விட்டது. இந்த நாவல், கொஞ்சம் எழுத்தாளர் என்ற மரியாதையை உண்டாக்கியுள்ளது. எழுத்தாளர்களும் மனிதர்களே, சில சமயம் அவர்களும் தங்கள் அறிவுஜீவி பிம்பத்தை நிலைநிறுத்த ஏதாவது கோமாளித்தனம் செய்ய வேண்டுமல்லவா!!

என் பார்வையில் ஒரு சுமாரான ஒரு நாவல், ஒரு வேளை காலம் கடந்த விஷயங்களை பேசுவதாலோ?

ஜெயமோகனின் இந்த பதிவு இதைப்பற்றி விரிவாக பேசுகின்றது. அவர் கூறும் சில விஷயங்கள் தானே புரிகின்றது. சில சொன்னலும் என்னால் பொருத்தி பார்க்க முடியவில்லை. 

இங்கே வாங்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக