கிண்டிலில் மேய்ந்து கொண்டிருந்த போது நாரத ராமாயணம் என்று ஒன்று கண்ணில் பட்டது. புதுமை பித்தன் எழுதியது. ஒரு முறை சரிபார்த்து கொண்டேன், ஒரிஜினல் புதுமைபித்தன் தான் என்று. 300 வகை ராமாயணங்கள் உண்டு என்பார்கள். ராமரை அனைவரும் சொந்தம் கொண்டாடியதன் விளைவு. ஜைனர்கள், புத்தர்கள் என்று அனைவரும் ராமரை அவரவர் வசதிக்கு மாற்றி கொண்டார்கள். திராவிட புத்திசாலிகள், பிராமண ராவணனை சொந்தக்காரனாக்கி, ராவண காவியம் எழுதிக் கொண்டார்கள்.
புதுமைபித்தன் கிண்டலான எழுத்துக்கு சொந்தக்காரர். புதுமைபித்தன் நடை திருவிளையாடல் சிவாஜி நடையை விட பிரபலமானது என்பதால் என்ன எழுதியிருக்கின்றார் என்று படிப்போம் என்று படித்தால், சரியான திராபை.
கடவுளும் கந்தசாமி பிள்ளையும், அகல்யை, காஞ்சனை போன்றவற்றை எழுதியவரா இதையும் எழுதினார் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கின்றது. ஹிந்து மதத்தில் கடவுள்களை ஜாலியாக நாம் கிண்டல் செய்யலாம், திட்டலாம். (பக்தியுடன் அவனை நம்பும் பக்தர்களுக்குதான் அந்த உரிமை, நம்பாத பொறுக்கிகளுக்கு இல்லை), அதனால் முதல் பகுதி கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருந்தது. வயதான ராமருக்கு போரடிக்கின்றது. அதனால் மீண்டும் காட்டிற்கு சீதையுடனும், அனுமனுடனும் போகின்றார். வேறு ஏதாவது அரக்கன் வருவான், அவனுடன் போர் செய்யலாம் என்று. அனுமனுக்கு பர்ணசாலை கட்ட தெரியவில்லை என்று கொஞ்சம் ஜாலியா போகின்றது.
