08 மார்ச் 2014

வசந்த் வசந்த் - சுஜாதா

ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு தளத்தை எடுத்துக் கொள்ளும் சுஜாதா இக்கதைக்கு எடுத்துக் கொண்டது சரித்திரம்.

சரித்திர பேராசிரியரின் மகளுக்கு ரூட் போடும் வசந்த், அப்பேராசிரியரின் தொலைந்து போன கட்டுரையை தேடி போய், இக்கதையை ஆரம்பித்து வைக்கின்றனர். வழக்கம் போல ஆக்‌ஷனை வசந்தும், லாட்ரல் திங்கிங்கை கணேஷும் பிரித்துக் கொள்கின்றனர்.  இந்த கதையில் வசந்திற்கு ஆபத்து கொஞ்சம் ஓவர் டோஸாக் போய், சினிமா கதையாக மாறிவிட்டது.

அதிகம் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாத கதை. குற்றவாளிகளுக்கு தேவையில்லாத அந்த கட்டுரையை ஏன் திருட வேண்டும் என்ற கேள்வியை கேட்டாலே கதை ஓவர். கட்டுரையை வைத்து கதையை எழுத நினைத்து, பின்னால் மனசு மாறி கதையை வேறு எங்காவது ஓட்டிச் சென்றிருக்க வேண்டும். கடைசி வரை முடிவை யூகிக்க முடியாமல்தான் கதை நகர்த்தியிருக்கின்றார். 


ஆர்.வி கூறுவது போல இது ஜேம்ஸ்பாண்ட் கதை மாதிரிதான். அடுத்தடுத்து என்ன என்று படித்துக் கொண்டே சென்று முடித்துவிட்டு யோசித்தால் லாஜிக் ஓட்டைகள் தெரியவரும்

அதில் வரும் பத்திற்கு இருபது, பத்திற்கு நாற்பதை விட பெட்டரான வியாபாரமா என்ற கேள்வி. கதையின் முடிச்சு. கூடவே கொஞ்சம் கெமிஸ்ட்ரி, வரலாறு. கல்வெட்டு பாட்டெல்லாம் வருகின்றது. 

வசந்த் விட்டு செல்லும் புத்தகத்தின் வரிகள்! கல்கியில் எப்படி கண்டுகொள்ளாமல் விட்டார்கள். மடி பத்திரிக்கையாச்சே!!!

சுஜாதாவிற்கு வயதானது என்பது அவர் இறப்பிற்கு பின்னால்தான் பலருக்கு நினைவிற்கு வந்திருக்கும். இளமை துள்ளலான வசந்தை படித்தால், அது பார்க்க உர்ரென்று இருக்கும் இவரின் இன்னொரு பகுதியோ என்றுதான் தோன்றுகின்றது.

கிழக்கு பதிப்பகம் - 140

5 கருத்துகள்:

  1. சுஜாதா கதைகளை அடுத்தடுத்து எடுத்துக் கொண்டதற்கு பிரத்யேகக் காரணங்கள் ஏதும்? சுஜாதா கதைகள் சுவாரஸ்யம். ஆரம்பகால பாதிராஜ்யம், 6969, நைலான் கயிறு எல்லாம் ஒரு ரகம். அப்புறம் 14 நாட்கள், வானமெனும் வீதியிலே எல்லாம் இன்னொரு ரகம். கணேஷ் வசந்த் கதைகள் தனி சுவாரஸ்யம். ஒரு கட்டத்தில் அவரின் கதைகளை விட கட்டுரைகளை ரசிக்க ஆரம்பித்து விட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனி காரணம் ஏதுமில்லை. ஏதாவது ஒன்றை படித்தால் அதிலிருந்து வேறு ஒன்றை பிடிப்பது என் வழக்கம். ஆழி சூழ் உலகிலிருந்து விடிவதற்குள் வா கையில் எடுத்தேன். அதிலிருந்து சுஜாதா கதைகள் அடுத்தடுத்து வர ஆரம்பித்தது. கொஞ்சம் பரபரப்பான கதைகள் படிக்கும் மூட் வந்துவிட்டது.

      நீக்கு
    2. அவரது சிறுகதைகள் எல்லாம் முழுத்தொகுதிகளாக வாங்கிவிட்டேன், குறுநாவல்களும். விடுபட்டது பெரிய நாவல்கள். அதை ஒன்றொன்றாக சேர்த்துக் கொண்டுள்ளேன். விகடனில் வரும் கட்டுரைகள், கணையாழியின் கடைசி பக்கத்தை விட கொஞ்சம் சுவாரஸ்யம் கம்மிதான். எஸ்.ஆர் என்னும் பெயரில் இருந்த வசதி சுஜாதா என்னும் பெயரில் இல்லை.

      நீக்கு
  2. நானும் அவரின் சிறுகதைத் தொகுதி, நாவல் தொகுதி, கணேஷ்-வசந்த் கலெக்ஷன், நாடகங்கள் என்று உயிர்மையிலிருந்து வாங்கியிருக்கிறேன். அவரது கட்டுரைத் தொகுதியில் எண்ணங்கள், எழுத்துகள், சுஜாதா கேள்வி பதில் 3 பார்ட் , கற்றதும் பெற்றதும், சுஜாதாட்ஸ் போன்றவையும் வைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் கூறியது போல் இந்த நாவலை ஒரு திரைகதை வடிவில் தான் எழுதியிருப்பார் சுஜாதா... லாஜிக் எல்லாம் சுஜாதா நாவலில் நான் பார்பத்தில்லை, ஏன் என்றால் அவர் தான் சுஜாதா ஆயிற்றே.. எனக்கு மிகவும் பிடித்த நாவல் சார்

    பதிலளிநீக்கு