இந்தியப்பிரிவினை பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்திருக்கின்றன். தமிழில் என் கண்ணில் பட்டது இது, இதற்கு முன் குஷ்வந்த் சிங் எழுதிய பாகிஸ்தானுக்கு போகும் ரயில், மொழிபெயர்ப்பை படித்து முழி பிதுங்கியதை நினைவில் கொண்டுவந்துவிட்டது இப்புத்தகம். வரலாற்றை எழுதுபவனின் அரசியல் அவன் எழுதும் வரலாற்றி கலக்கும், ஆனாலும் மிகவும் ஒரு பக்க சார்ப்பாக எழுதினால் அது வரலாறு அல்ல. இந்தியப்பிரிவினை பற்றிய வரலாற்றை எழுதும் போது தன்னுடைய அரசியலையும் கலந்து எழுதியிருக்கின்றார்.
நான் லீனியர் முறையில் வரலாற்றை எழுதும் யோசனையை அவருக்கு யார் தந்தது என்று தெரியவில்லை. அனுகூல சத்ரு. எங்கெங்கோ அலைகின்றது. படிப்பவர் மனதில் ஒரு ஆழ்ந்த பாதிப்பை உண்டாக்க கூடிய சம்பவம், பிரிவினை. ஒரு கொசு கடித்த உணர்வை கூட ஏற்படுத்தாத அளவில் எழுதப்பட்டுள்ளது. அனைத்தும் துண்டு துண்டாக இருக்கின்றது. பிரிவினையின் போது நடந்த துயரஙக்ளை பற்றி சும்மா இரண்டு மூன்று பக்கங்களில் அடித்துவிட்டு விட்டு போக எதற்கு ஒரு புத்தகம்.
படிக்க வேண்டியதில்லை என்று பரிந்துரைக்கின்றேன்

மிக பல புத்தகங்களின் வாசிப்பு அனுபவங்களை எழுத்துகின்றீர்கள்...அனைத்தும் நன்று....
பதிலளிநீக்குமகிழ்வுடன் தொடர்கிறேன்...
அனுபிரேம்
https://anu-rainydrop.blogspot.in/