முந்தைய பகுதிகள்
அனைவரும் விரும்பும் தபால்க்காரர் தாத்தாச்சாரி, தள்ளாத வயதிலும் ஊர் ஊராக நடக்கும் பெரியவர். அவர் நடந்து நடந்து மறக்க நினைப்பது அவர் மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையை. ரயிலில் தவறான பாதையில் ஒரு முறை சென்ற மனைவியுடன் ஒரே வீட்டில் இரண்டு குடித்தனங்கள் நடத்திய நினைவை மறக்க நடக்கின்றார், நடந்து கொண்டே இருக்க நினைக்கின்றார்.
92. பஞ்சத்து ஆண்டி
தொழில் நசிந்து போன ஒரு நெசவாளி. பஞ்சம் பிழைக்க ஊர் விட்டு ஊர் வந்து கடைசியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வருகின்றான். அவனின் நிலையைக் கண்டு பரிதாபப்படும் குரங்காட்டி அவனது மற்றொரு குரங்கை அவனிடம் தந்து அவனை அதை வைத்து பிழைக்குமாறு கூறுகின்றான். பஞ்சத்து ஆண்டிக்கு பரம்பரை ஆண்டியைப் போல் இருக்க முடியாமல், குரங்கை சாக விட்டு விடுகின்றான். பாவம்.
93. நான்தான் ராமன் நாயர்
ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒரு வித்தியாசமான கேரெக்டர். பிழைக்க வழியில்லாமல் மருத்துவமனையில் நோயாளி என்ற போர்வையில் உண்டு உறங்கும் ஒரு ஆள். கடைசியில் அதுவே ஒரு தொழிலாகின்றது, அங்குள்ள நோயாளிகளுக்கு எடுபிடி வேலை செய்து வாழ்கின்றான். கடைசியில் ஒரு நாள் வெளியேற்றப் படுகின்றான்
94. தூரப் பிராயணம்
தூரப்பிராயணம் செய்து முன்னாள் பக்கத்து வீட்டு பெண் பாலியை பார்க்க வருபவனுக்கு சின்ன அதிர்ச்சி. நன்றாக எழுதப்பட்ட கதை. அவனுக்கும், அப்பெண்ணிற்குமான உறவை வெகு பூடகமாக எழுதியுள்ளார். பெண்ணின் மனது ஆழமானதுதான்.
95. ராவணன் காதல்
புராண சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. ராவணன் சாபம் பெற்ற கதை. புஞ்சிகஸ்தலை (தட்டுவதற்கு மிக கஷ்டமான பெயர்) கதை. இது வரை எங்கும் கேள்விப்படாத கதை.
96. பிராயணக்கதை.
குருவி, காக்கா என்று பறவைகளை வைத்து எழுதியுள்ளார். ஏதோ அக்கால வம்பு. ரயிலில் செல்லும் குருவி, தண்ணியடிக்கும் காக்கா.
97. அதிருஷ்டம்
மிககஷ்டமான குடும்பத்தை சேர்ந்த ஒருவன், பணக்கஷ்டம் அளவிற்கு மீறியது. கடைசியில் அவனது குணத்தை மீறி ஒரு வேலையை செய்கின்றான். பாவம் அதுவும் தோல்வியில் முடிகின்றது. பாவம் அவனது அதிருஷ்டம் அவ்வளவுதான்.
98. வேறு வழியில்லை
ஒரு நல்ல கதை. ஒரு கிழவனை கல்யாணம் கட்டிக் கொண்ட ஒரு இளம் பெண். அவன் ஒரு சந்தேகப்பிராணி, அடி உதை சகஜம். ஆற்றிற்கு போகும் வழியில் ஒருவனைக் காண்கிறாள், அவனின் வீட்டிற்கு செல்வதற்காக கணவனிடம் அன்பாக இருப்பது போல நடிக்க நினைத்து கடைசியில் அவனின் அன்பிற்கான விதையை விதைக்கின்றாள். விதைக்க வேண்டியது எதை என்பதையும் கண்டு கொள்கின்றாள்.
99. குளிர் ஜுரம்
ஒரு கதாசிரியரின் கதை. நேரத்திற்கு கதை எழுத முடியாத கதாசிரியர் படும் அவஸ்தை. சுமாரன கதை.
100. பூட்டுக்கள்
ஒரு நல்ல நகைச்சுவை கதை. ஊருக்கு செல்லும் ஒரு குடும்பம், வீட்டை முழுவதும் பூட்டிக்கொண்டு, அக்கம் பக்கம் எல்லாம் பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, படு ஜாக்கிரதையாக கிளம்புகின்றது. கடைசி முடிவு, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக