முந்தைய பகுதிகள்
பகுதி 10
101. பாரிமுனை டு பட்ணபாக்கம்
இரு போன்ற மனிதர்களை பல முறை பல இடங்களில் பார்த்திருப்போம். அதை எப்படி ஒரு கதையாக்குவது என்பதுதான் சூட்சுமம். ஒரு குடிகாரன் டிராமில் செய்யும் அட்டகாசம். அவனது பேச்சுதான் கதை முழுவது. நன்கு ரசிக்கலாம்
102. கம்ப்ளெய்ண்ட்
அரசாங்க அலுவலகத்தில் நாம் தரும் கம்ப்ளெய்ண்ட்களின் கதி என்ன? சாதாரண சிறு அலுவலகங்களிலேயே கஷ்டம். மிகப்பெரிய ஒரு யந்திரமான ரயில்வே பற்றி புகார் அளித்தால்? சாப்பாடைப் பற்றி ஒரு புகார், அது என்னவாகின்றது?
103. வேதாந்தியும் உப்பிலியும்
வேதாந்தி முஸ்லீமாக மதம் மாறிவர், உப்பிலி ஒரு வாய்ச்சவடால் ஆசாமி. சீமாண்டி உப்பிலியின் அண்ணா பையன். அவர்களின் உரையாடல் தான் இக்கதை.
நமது அரசியல்வாதிகளை நக்கலடிக்கும் கதை. டெல்லியில் யாரையாவது பார்த்திருப்பார் போல, தனியாக பார்க்க வேண்டுமா என்ன எல்லாரும் ஒரே மாதிரிதானே. உளுந்து வாரியத்தலைவருக்கு ஏகப்பட்ட மரியாதை, அதைக் கண்டு வியக்கும் ஒரு சாதரணர். அவர் ஒரு நாட்டின் மந்திரி.
மீண்டும் உப்பிலியும் சீமாண்டியும். அவரைக் காண வரும் கோவிந்து. அவர்தான் நாதரட்சகர். தனக்குதானே அட்சதை போட்டுக் கொள்ளும் ஒரு கேரெக்டர்.
106. மிஸஸ் மாதங்கி.
அதிகார வர்கத்தின் முகத்தைக் காட்டும் கதை. பெரிய பதவியில் இருப்பவர்கள் ஒரு தனி ரகம். அதுவும் அரசாங்க பதவியில் இருப்பவர்களை தனியாக கண்டு பிடிக்கலாம். ரயில் நிலையத்தில் நிற்கும் போது அவர்களை தனியாக கண்டு பிடிக்கலாம். ஒரு விரைத்த முகம், ஒரு அலட்சிய பார்வை, வித்தியாசமான உடல் மொழி. அப்படி பட்ட ஒரு அதிகார கோத்திரத்தின் ஒரு புள்ளி மாதங்கி. அவரிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு சாதாரண கோத்திரன்.
ஒரு பெரிய மனிதர். அக்கால கிசு கிசு. பல பெரிய மனிதர்களின் ரசனை இப்படித்தான் இருக்கும் போல.
தர்மம் தலை காக்கும். பத்து செட்டி ஒரு நொடித்து போன செட்டி, கடைசியில் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்து பின் தர்மத்தால் வளர்கின்றார்
110. உதட்டுக்காரப் பையன்
அரசாங்க அலுவலகத்திற்கு எப்போது போனாலும் நினைக்கும் ஒரு விஷயம், இவர்கள் வீட்டிலும் இப்படித்தான் இருப்பார்களா, இவர்களும் சாதரண மனிதர்கள் போல் சிரிப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது, மனைவியுடன் கொஞ்சுவது இதெல்லாம் செய்வார்களா, இல்லை வீட்டிலும் ஒரு மூலவியாதிக்காரன் மாதிரியே இருப்பார்களா என்று. அதுதான் இக்கதையும்.
ஒரு படத்தில், ஐஸ் ஹவுஸ் போக ஒருவனுக்கு வழி சொல்லிவிட்டு பணம் கேட்டு கலாட்டா செய்வார்கள். அதன் மூலம் இக்கதையோ என்னவோ?
மருத்துவக் கொள்ளை பற்றிய கதை. ஜெ. மோ தளத்தில் எழுதியிருந்தார். இன்று வறுமை உணவில் இல்லை.மருத்துவம், படிப்பு போன்ற விஷயங்களில் தான் உள்ளது. மிகச்சரியான வார்த்தைகள். கொள்ளையடிக்கும் மருத்துவர்களை விஞ்ஞான வெட்டியான் என்கின்றார். அங்கு பணிபுரியும் அசல் வெட்டியான்களிடமும் கொள்ளை அடிக்கும் அவர்களை என்ன செய்ய.
113. 23இ பேருந்தில்
பெருந்தில் நடக்கும் ஒரு வம்புச்சண்டை. கடைசியில் இருக்கும் பின் குறிப்புதான் கதை வேறு ஏதோ ஒன்றை குறிப்பிடுகின்றதோ என்று தோன்றுகின்றது. என்ன என்றுதான் புரியவில்லை
114. காவலுக்கு
வீம்பு மாமியார் - வம்பு மருமகள். பாட்டியை காவலுக்கு வைத்துவிட்டு போகின்றார்கள். காவலுக்கு பாட்டியை வைக்கும் மருமகள் காவல் காக்கும் மிருகத்துடன் ஒப்பிட மகனுக்கு தலைவலி
இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற கதை. ஒரு நாய் பேசுவதை போன்ற கதை, நிஜமாக ஒன்றும் புரியவில்லை. நாயை பற்றி பேசுவெதென்றால் ஓகே, இதில் ஏதாவது மறைபொருள் உள்ள்தோ என்ற சந்தேகம் வருகின்றது. சாமான்யர்களுக்கு புரியாததால்தான் பரிசு கிடைத்துள்ளதோ.
தி. ஜா எழுதியது அனைத்தும் காமத்துப் பால் என்ற பிம்பம் பெரும்பாலனோர் மனதில் இருக்கலாம். இச்சிறுகதைகளைப் படித்தால் அப்பிம்பம் மாறும். அவர் அனைத்துவிதமான மனிதர்களையும் பற்றி எழுதியுள்ளார். அவர் கூறியதைப் போல கண்ணையும் காதையும் நன்கு திறந்து வைத்துக் கொண்டு, அவர் கண்டது, கேட்டது அவற்றுடன் அவரது கற்பனையையும் கலந்து நமக்கு கொடுத்துள்ளார். அவர் காட்டும் மனிதர்கள் முழுக்க முழுக்க கற்பனை மனிதர்கள் அல்லர். அவர்களை நாமும் எங்கோ சந்தித்திருப்போம், சந்திப்போம்.
புத்தகத்தில் வருடமும், பத்திரிக்கை பெயரும் உள்ளது. அதை மெதுவாக அப்டேட் செய்து வைக்கின்றேன். முடிந்தவரை கண்ணில் பட்ட கதைகளின் சுட்டி தரப்பட்டுள்ளது. இனிமேல் படுவதும் அப்டேட் செய்யப்படும்.
விக்கிரமாதித்தன் கதைபோல் நீள்கிறதே!இன்னும் மிச்சம் மீதி இருக்கிறதா என்ன?
பதிலளிநீக்குபயப்பட வேண்டாம், முடிந்து விட்டது. தி. ஜாவின் இரண்டு தொகுதிகளில் இருந்த கதைகளை பற்றி சுருக்கமாக எழுத நினைத்தேன். அது 11 பகுதிகளாகிவிட்டது. அதில் இன்னும் இரண்டு கட்டுரைகள் உள்ளன (புத்தகத்தில்தான்). பயணக்கட்டுரைகள். படித்து முடித்ததும் அதுவும் வந்து விடும்.
நீக்கு